Connect with us

Entertainment

நடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு

நடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் விசாரணை நிலைகுறித்து விளக்கம் தர வேண்டும் என சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில் சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா 70 லட்சத்திற்கு ரூபாய் க்கு (சுமார் 30000 யூரோ) மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பணத்தை திரும்ப கேட்டபோது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று விட்ஜாவை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படங்கள் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடும். சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அரசு தரப்பு வக்கீல், புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

பாருங்க:  ஆர்யா மீது பெண் தொடுத்த மோசடி வழக்கில் திருப்பம்

Entertainment

30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்

உலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.

சோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு  சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

சில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  சத்யராஜ் பெயர்தான் முதலில்- சசிக்குமாரின் வேண்டுகோள்
Continue Reading

Entertainment

நடிகர் ஜெய்யின் மகிழ்ச்சி

பகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.

நடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்

தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.

தன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.

 

பாருங்க:  டெடி படத்தில் டெடியாக நடித்தவர் யார்
Continue Reading

Entertainment

நடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்

கவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.

மேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.

நடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

பாருங்க:  கலக்கும் ரஞ்சித்தின் 80ஸ் சார்பட்டா
Continue Reading

Trending