Entertainment
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்
அந்தக்கால திரைப்படங்கள் ஆனாலும் சரி எண்பதுகளில் வந்த பல படங்கள் என்றாலும் ஆரூர்தாஸ் அவர்களின் வசனம் இல்லாமல் அந்த படங்கள் நிறைவு பெறுவதில்லை.
மிக தெளிவான வசனங்களை திறம்படஎழுதுவதில் வல்லவர். அந்தக்காலத்து சத்தியவான் சாவித்திரி தொடங்கி, 2014ல் வெளியான வடிவேலு நடித்த தெனாலி ராமன் வரை பல படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர்.
தனது சொந்த ஊரான திருவாரூரை சுருக்கி ஆருர் என்றும், தனது இயற்பெயரான ஜேசுதாஸை சுருக்கி தாஸ் என்றும் சேர்த்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துள்ளார் இவர்.
இவருக்கு தற்போது 90 வயதாகிறது. இவரின் நீண்ட கால சேவையை பாராட்டி கலைஞர் வித்தகர் விருது என்ற விருதை முதல்வர் ஸ்டாலின் ஆரூர்தாஸ் வீட்டிற்கே சென்று வழங்கினார்.
#திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார் முதல்வர் #மு.க.ஸ்டாலின் pic.twitter.com/qN2KE0NZe7
— Dinakaran (@DinakaranNews) June 3, 2022
