Entertainment
அருண் விஜய் நடிக்கும் யானை பட ரிலீஸ் தேதி வெளியானது
அருண் விஜய் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான திரைப்படம் ஹரி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள யானை திரைப்படம்.
ஹரி படம் பொதுவாக ஆக்சன் படமாக இருக்கும் இதனால் ஹரி படத்துக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பர்.
மேலும் யானை படம் ஹரி இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து வருவதாலும் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் , நாகூர், காரைக்குடி பகுதிகளில் யானை படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
