Latest News
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி மரணம்
கனா படத்தை இயக்கியவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்குனர் மட்டுமின்றி பாடகருமாவார். ஆரம்பத்தில் வந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து நகைச்சுவையிலும் ரசிக்க வைத்தவர் இவர். கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை இவர்தான் பாடியுள்ளார்
இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராவார். அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
