ஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்

18

பிரபல ஓவியர் இளையராஜா. இவரது ஓவியங்கள் எல்லாம் மிக தத்ரூபமாக இருக்கும் சில வருடங்களாகத்தான் இளையராஜாவின் ஓவியங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது.

இசைக்கு இளையராஜா போல் ஓவியத்துக்கு ஒரு இளையராஜா என்று சொல்லுமளவுக்கு பெரிய அளவில் வளர்ந்து வந்தார் இளையராஜா.

இந்நிலையில் பல பிரபலங்களை பலி வாங்கிய கொரோனா தொற்று இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. சாதாரண காய்ச்சல் என நினைத்து காய்ச்சலுக்கு ஆரம்பத்தில் சிகிச்சை எடுக்காத காரணத்தால் கொரோனா வீரியம் அதிகமாகி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இவர் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  யுடியூபில் லைவ் கான்சர்ட்! கொரோனாவுக்காக அனிருத் எடுத்த முடிவு!
Previous articleஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்
Next articleஅஞ்சலி திருமணத்துக்கு தயாராகிறாரா