Latest News
இரண்டு வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
இரண்டு வயது பெண்குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொள்பவன் எப்படிப்பட்ட மனநிலை கொண்ட மனித மிருகமாக இருப்பான் பார்த்துக்கொள்ளுங்கள். உத்திரபிரதேசத்தில் காவி நகரில் 2 வயது பெண் குழந்தை ஒன்று திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், அக்டோபர் 19ஆம் தேதி காவி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி அடுத்த நாள் ஒரு இடத்தில் அந்த கொலை செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கிடந்தது. இது பற்றி பலரிடம் விசாரித்த நிலையில் குழந்தையின் தந்தையின் நண்பர் சந்தன் பாண்டேவிடம் போலீசார் விசாரித்தனர்.
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சந்தன் பாண்டே குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் டிசம்பர் 29ஆம் தேதி அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 10 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது.
தற்போது, இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சந்தன் பாண்டேவுக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
