ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மனைவியுடன் தாக்கப்பட்டார்! காரணம் இதுதானா?

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மனைவியுடன் தாக்கப்பட்டார்! காரணம் இதுதானா?

இந்திய அளவில் புகழ்பெற்ற ஊடகவியலாளராக அறியப்படும் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தி மீது சில விமர்சனங்களை வைத்தார். அதி; சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் மூன்று சாமியார்கள் காங்கிரஸ் நபர்களால் தாக்கப்பட்டது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மௌனமாக இருக்கிறார்கள் என்றும், இதே வேறு மதத்தவர் தாக்கப்பட்டால் ’இத்தாலி சோனியா காந்தி’ உடனடியாக பேசியிருப்பார் என்றும் அவர் கூறினார். அர்னாப் கோஸ்வாமியின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குக் காரில் சென்று கொண்டு இருக்கும்போது அவரது காரை மறித்த சிலர் அவரையும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். இதை தங்கள் சமூகவலைதளத்தில் அறிவித்துள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி காங்கிரஸ் ரௌடிகளால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.