பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது

பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது

ரிபப்ளிக் டிவியில் வரும் அர்னாப் கோஸ்வாமியின் விவாத நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அனல் பறக்கும் விவாதத்தில் அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவரின் பேச்சில் தவறு என்றால் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என முகத்திலடித்தாற்போல் பேசிவிடுவார் இதனாலேயே அர்னாப் மிக சீக்கிரமாக பரபரப்பான பத்திரிக்கையாளரானார்.

இவர் மீது மும்பையை சேர்ந்த அன்வாய் நாயக் என்ற ஆர்க்கிடெக்ட் தன் மரணத்துக்கு காரணம் அர்னாப் கோஸ்வாமி என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அதனால் அர்னாப் அவரது வீட்டில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அர்னாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்னாப் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றதாக சொல்லப்படுகிறது. போலீசார் தன்னைத் தாக்கியதாக அர்னாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போலீசார் அது உண்மை இல்லையென மறுத்துள்ளனர். தற்போது இந்த செய்தி வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது