தெலுங்கு படம் இயக்கும் நடிகர் அர்ஜூன்

தெலுங்கு படம் இயக்கும் நடிகர் அர்ஜூன்

நடிகர் அர்ஜூன் அதிகமான படங்களில் ஆக்சன் வேடங்களில் நடித்திருந்தாலும் ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, உட்பட பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். இவரிடம் உதவி இயக்குனராக ஒரு காலத்தில் பணிபுரிந்தவர்தான் நடிகர் விஷால்.

சமீபத்தில் அவரது மகளை வைத்து ஒரு படம் இயக்கி இருந்தார் அர்ஜூன். இப்போது மீண்டும் அர்ஜூன் தெலுங்கில் ஒரு படம் இயக்குவதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

நடிகை சமந்தாவின் கணவரும் நடிகர் நாகார்ஜூன் மகனுமான நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். நாகசைதன்யா இவர் தெலுங்கில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ளவர் ஆவார்.

அர்ஜூன் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகும் படத்தை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.