Connect with us

டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!

Corona (Covid-19)

டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!

தமிழகத்தில் டாஸ்மாக் கடை நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் அரியலூரில் கொரோனா நோயாளியே வந்து மது வாங்கியதாக ஒரு தகவல் பரவியதால் பீதி ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகளை திறப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆனால் எதிர்ப்புகளையும் மீறி நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது வழக்கமான நாளை விட 220 சதவீதம் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரியலூர் சராகத்திற்கு உடப்பட்ட மதுக்கடை ஒன்றில் கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் மது வாங்கி சென்றுள்ள செய்தி பரவியது மது பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மதுக்கடையை மூட ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ் உத்தரவிட்டதன் பேரில் அந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது.

பாருங்க:  இன்று மஹா சிவராத்திரி - கண்டிப்பா கோவிலுக்கு போங்க

More in Corona (Covid-19)

To Top