Connect with us

Corona (Covid-19)

டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!

தமிழகத்தில் டாஸ்மாக் கடை நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் அரியலூரில் கொரோனா நோயாளியே வந்து மது வாங்கியதாக ஒரு தகவல் பரவியதால் பீதி ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகளை திறப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆனால் எதிர்ப்புகளையும் மீறி நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது வழக்கமான நாளை விட 220 சதவீதம் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரியலூர் சராகத்திற்கு உடப்பட்ட மதுக்கடை ஒன்றில் கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் மது வாங்கி சென்றுள்ள செய்தி பரவியது மது பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மதுக்கடையை மூட ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ் உத்தரவிட்டதன் பேரில் அந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது.

பாருங்க:  ஸ்டாலின் தவறாக பரப்பி வருகிறார்- எடப்பாடி

Corona (Covid-19)

கோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்த கொரோனா பரவல் ஓரளவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பெரும்பாலான இடங்களில் சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தொடர்கிறது. முக்கியமாக இந்த முறை கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பரவல் அதிகம் இருந்தது.

தற்போது பல மாவட்டங்களில் கொரோனா குறைந்து இருந்தாலும், பக்கத்து மாநிலமாக கேரளா கோவைக்கு மிக அருகில் இருப்பதால் கேரளாவில் ஏற்பட்டிருக்கும் கடுமையான தொற்று கோவைக்கும் லேசாக பரவி அதிகரிக்கிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் பேக்கரிகளில் காலை  8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.

மளிகை , பால்கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!
Continue Reading

Corona (Covid-19)

கொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், உரிய இழப்பீடு இறந்தவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதில்லை என கொரோனா உயிரிழப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், உயிரிழப்போருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தீபக் பன்சால் மற்றும் கவ்ரவ் பன்சால் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கிற்கு பதிலளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, மரபணு பரிசோதனை, அண்டிஜென் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளால் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டோ அல்லது தக்க மருத்துவர் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக சான்றளித்தாலோ அது கொரோனா உயிரிழப்பாக எடுத்துகொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தொற்றினால் உயிரிழப்பவர்களில் 95% பேர் 25 நாட்களுக்குள் உயிரிழந்துவிடுவதாக ஆய்வுகள் கூறினாலும், 30 நாட்களுக்குள் ஏற்படும் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அவர் 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றிருந்தாலும் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனா பாதித்த நபர் நஞ்சு உட்கொண்டோ, தற்கொலை, கொலை, விபத்து இவற்றினால் உயிரிழப்பு நேர்ந்தால் அம்மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அப்பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  FANI(பானி) புயல் - கஜா புயலை விட 2 மடங்கு வேகம்! #CycloneFani
Continue Reading

Corona (Covid-19)

மூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்

சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது.

தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்; 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது –

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்; கொரோனா 3வது அலை வருமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் கூடுதலாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தடுப்பூசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறினார்.

பாருங்க:  திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!
Continue Reading

Trending