cinema news
ஏ.ஆர் ரஹ்மானின் தமிழ்த்தாய்- விமர்சனத்துக்குள்ளாகும் ரஹ்மான்
நேற்று ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பதிவில் தமிழணங்கு என்று பதிவிட்ட ஒரு தமிழ்த்தாயின் படத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு அவர் சமீபத்திய அமித்ஷாவின் ஹிந்தி குறித்த பேச்சுக்கான குறியீடாக பதிவிட்டதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.
சிலர் அவரை ஆதரித்தாலும் பலர் அவரை எதிர்த்து வருகின்றனர். எந்த ஊரில் தமிழ்த்தாய் இப்படி இருந்தாள் தமிழர்களின் தமிழ்த்தாய் மங்களகரமாக இருப்பாள் என வழக்கமாக நாம் பயன்படுத்தும் அழகான தமிழ்த்தாய் படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
முக்கியமாக தமிழ்த்தாயை தலைவிரிகோலமாக வரைந்து வைத்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.