Entertainment
ஏ.ஆர் ரகுமானுக்கு சீமான் ஆதரவு
ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு படத்தின் மூலம் புகழின் உச்சம் தொட்ட ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வரை வாங்கியுள்ளார்.
சமீபத்தில் ஹிந்தி மொழியை முக்கிய மொழியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் தமிழ் ஆதரவு டுவிட்டும் வலம் வந்தது. ஏ.ஆர் ரஹ்மான் தமிழ்த்தாயை கொடூரமாக வரைந்து வைத்திருந்ததாக பலர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.
ஏ.ஆர் ரஹ்மானுக்கு பலர் ஆதரவும் தெரிவித்தனர் இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மானுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளார்.
