ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல் பாடிய தனுஷ்

22

நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் ஆரம்ப காலத்தில் இருந்தே தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாடி விடுவார்.அதுபோலவே தனுசும் தான் நடிக்கும் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஆரம்ப காலங்களில் இருந்தே பாடல் பாடுவது எழுதுவது என கலக்கி வருகிறார்.

இவர் பல படங்களில் பாடி இருக்கிறார். இவரது குரலில் வந்த பாடலில் மெகா ஹிட் ஆன பாடல் வொய் திஸ் கொலவெறி அந்த பாடல் ஹிட் ஆகி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை ரசித்து அப்பாடலை கேட்டார்.

தனுஷ் பாடுவதில் வல்லவர் அவர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கடந்த 2013ல் வந்த மரியான் படத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது.

தற்போது தனுஷ் ஹிந்தியில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் படம் அட்ராங்கிரே. இந்த படத்தில் இவருடன் இணைந்து அக்சய்குமார் மற்றும் சாராஅலிகான் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இதுவே ஏ.ஆர். ரகுமான் இசையில் தனுஷ் பாடும் முதல் பாடலாகும். இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பாருங்க:  58 பேருடன் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட பிருத்விராஜ் – இந்திய அரசுக்குக் கடிதம் !