A.R.RAHMAN
A.R.RAHMAN

நடிகரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது – ஏ ஆர் ரஹ்மான் ஆதங்கம்!

பாலிவுட் நடிகரான இர்பான் கான் மரணமடைந்த நிலையில் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது குறித்து ஏ ஆர் ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53)  புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று இவர் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமானார். ஊரடங்கு உத்தரவு காரணத்தால் தாயின்  இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத  இர்ஃபான் கான்  வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் பார்த்த வீடியோ வெளிவந்து அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதி சடங்கில் ரசிகர்கள் மற்றும் அவரது திரையுலக சகாக்கள் யாரும் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் அதுகுறித்த தனது வருத்தத்தை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘நடிகர் இர்பான் கான் மக்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட கலைஞர்கள்.ஆனால் அவர்களின் மரணத்துக்குக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இம்மாதம் புனித ரமலான் மாதம் அவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்’ எனக் கூறியுள்ளார்.