மூதாட்டி வீட்டின் வாயிலில் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து ஏபிவிபி நிர்வாகி டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 2020ஆம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதன் காரணமாக அகில பாரத வித்தியார்த்தி பரிசத் எனப்படும் ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குடியிருப்பின் கீழ்த் தளத்தில் வசித்து வரும் மருத்துவர் சுப்பையா, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான இடத்தில் பார்க்கிங் செய்வதால் ஏற்பட்ட விவகாரத்தில், அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அவரை கைது செய்யாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதம்பாக்கம் போலீசார் மருத்துவர் சுப்பையாவை கைது செய்துள்ளனர்.