பிரபல தயாரிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

142

மலையாளத்தில் பல புகழ்பெற்ற படங்களை தயாரித்தவர் ஸ்வர்கசித்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தயாரிப்பாளர் அப்பச்சன். இவர் பூவின்னு புதிய பூந்தென்னல்(பூவிழி வாசலிலே) ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்(தமிழில் அரங்கேற்றவேளை) இப்படி பல புகழ்பெற்ற படங்களை தனது ஸ்வர்கசித்ரா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

தமிழில் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை தயாரித்தவர் அவர் அப்பட வெளியீட்டின்போது தயாரிப்பாளர் அப்பச்சன், 1 கோடி ரூபாயை விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் கடனாக பெற்றாராம்.

அந்த பணத்தை திரும்ப கேட்டபோது அப்பச்சன் செக்காக கொடுத்துள்ளார். அந்த செக்கை பேங்கில் செலுத்தும்போது பணம் இல்லை என தகவல் வந்துள்ளது

இதனால் ஆத்திரமான எஸ்.ஏ சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியானது அதில் 1கோடி ரூபாயை எஸ்.ஏசிக்கு அப்பச்சன் வழங்க வேண்டும் 3 ஆண்டு சிறைதண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாருங்க:  அருள் மணக்கும் ஊத்துமலை முருகன் கோவில்
Previous articleபடத்தை வெற்றி பெற செய்த இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு
Next articleபாம்பு சிம்பு வம்பு