ஆறுமுசாமி ஆணையத்துக்கு தடை – நீதிமன்றத்தில் அப்போலோ மனு

266

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு தடை கேட்டு அப்போலோ நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் 150க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரனை நடத்தப்பட்டுள்ளது. ஜெ.விற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, தமிழக அரசு அல்லாத நிபுணத்துவம் கொண்ட மருத்துவர் குழு மூலம் சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். அந்த குழுவின் முடிவு வெளியாகும் வரை, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பாருங்க:  4 வயது சிறுமியை நாசம் செய்த ஆசிரியருக்கு தூக்கு...