அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீஸ் தீவிரம்

51

நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் நீண்ட காலமாக முன்னாள் அதிமுக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கான ஆதாரங்களை சாந்தினி நிருபர்களுக்கு அளித்திருந்தார். புகைப்படம் வாட்ஸப் மெசேஜ், வீடியோ கால் பேசியது என நிறைய ஆதாரங்களை அவர் வைத்திருந்தார். இதை சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்திலும் ஒப்படைத்திருந்தார்.

கமிஷனர் அலுவலகத்திலும் இது குறித்து புகார் கொடுத்திருந்த நிலையில், கமிஷனர் சங்கர் ஜிவால் இது குறித்து விசாரிக்க அடையாறு மகளிர் போலிசுக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313(பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல்),  323(அடித்து காயம் ஏற்படுத்துதல்), 417 (நம்பிக்கை மோசடி),376 பாலியல் பலாத்காரம் (உறுதியானால் ஆயுள் தண்டனை), 506(i)( கொலை மிரட்டல்), 67(எ)தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உதவிய பரணி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் தற்போது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருப்பதால் அவரை கைது செய்ய ராமநாதபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாருங்க:  எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த காயின்களை வழங்கிய எஸ்.வி சேகர்- லதா
Previous articleமனைவி குறித்த ராஜ்கிரணின் அன்பான பதிவு
Next articleஅமெரிக்காவின் பிரபல நடிகர் பலி