தமிழகத்தில், கொரொனாவால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் என்றும் 37 மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து, 5 இணை இயக்குநர்களை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. இதனையடுத்து, பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் மற்றோரு சிறப்பான வசதியும் ஏற்படுத்தியுள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஏதேனும் சந்தேகமா? அப்போ இந்த நம்பருக்கு ஒரே ஒரு மீஸ்ட் கால் கொடுங்க! மாணவர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு சந்தேகம் இருந்தால் 9266617888 என்ற எண்ணுக்கு மீஸ்ட் கால் (Missed Call) கொடுத்து விளக்கம் பெறலாம் என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையை தொடங்கக் கூடாது என்றும், 10ம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பள்ளி திறப்புக்கு முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் – என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.