Latest News
மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்
அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து மூத்த உறுப்பினராக இருந்து வருபவர் அன்வர்ராஜா. இவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். ஜெ ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், வக்பு வாரியத்தில் உயர் பதவி போன்றவற்றில் இருந்தவர்.
இராமநாதபுரம் எம்.பி, எம்.எல்.ஏவாகவும் பலமுறை இருந்தவர். சமீப நாட்களாக இவர் சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வந்தார். ஒரு நபரிடம் தொலைபேசியில் பேசும்போது முன்னாள் முதல்வர் எடப்பாடியை ஒருமையில் பேசினார். மேலும் சமீபத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் இவரை அடிக்க பாய்ந்ததாக கூறப்பட்டது. இதை அன்வர்ராஜா மறுத்தார்.
இந்த நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் இவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.