Entertainment
நன்றி தெரிவித்த அனுஷ்கா
பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா. இவர் பாலிவுட் நடிகையாக இருந்தார் சில வருடங்கள் முன் விராத் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் அனுஷ்கா கூறியுள்ளார்.
எங்கள் சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி சொல்ல விரும்புகிறோம், அவர்களின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தேசத்துக்காக நீங்கள் தொடர்ந்து உங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளீர்கள், அதற்காக நாங்கள் உங்களுக்கு நித்தியமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். விராட்டிற்கும் எனக்கும், தேசத்துக்கும் நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
