நடிகை அனுஷ்கா அதிக எடை போட்டுள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், ரஜினிகாந்த், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அனுஷ்கா. இவர் நடித்த அருந்ததி, பாகுபலி, சிங்கம் படங்கள் உட்பட பல திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவர் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக உடல் எடையை கடந்த 2015ம் ஆண்டு அதிகரித்தார். படம் தோல்வி அடைந்ததோடு, அவரின் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த 4 வருடங்களாக அவர் உடல் எடையை குறைக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார். பாகுபலியில் கூட சில காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.