இலங்கை நாட்டில் சிங்கள படங்களிலும் மற்ற படங்களிலும் நடித்து வந்தவர் அனுஷா சோனாலி. இவருக்கென அதிகமான ரசிகர்கள் இலங்கையில் உண்டு.
இவர் சில காலமாகவே நோயுற்றிருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இலங்கை தலை நகர் கொழும்புவில் உள்ள கழுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அனுஷா சோனாலியின் உயிர் பிரிந்தது. அவரது மரணத்துக்கு ரசிகர், ரசிகைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நடிகை அனுஷா சோனாலிக்கு 47வயதாகிறது.
இலங்கை சினிமாவில் அனுஷா சோனாலி நடித்த விசிடீலா உள்ளிட்ட படங்கள் புகழ்பெற்றது.