இந்தியாவில் மூன்றாவது முறையாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றி பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார்.
உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். மேலும் இப்போது அவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாஜக தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனமும் செய்து வருகிறார். பாஜக ஆட்சியில் நடக்கும் கும்பல் தாக்குதல் குறித்து அவர் விமர்சிக்க அது வலதுசாரிகளால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக மத்திய அரசு லாக்டவுனை நீட்டித்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஊரடங்குகள் தொடர்ந்து கொண்டே தானிருக்கும்… அவை தளர்த்தப்பட போவதில்லை. அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. பணமும் இல்லை. பொருளாதார அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கார்ப்பரேட்டுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு தீர்வைக் காண வேண்டிய நேரம் இது. அதற்கான முன்முயற்சி பிரதமரிடமிருந்து வர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.