cinema news
பிரபல ஹிந்தி இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய நடிகை
பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இவருக்கு ஹிந்தி மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. இவரின் படங்களில் அதிகம் ரணகளங்கள் இருந்தாலும் இவர் கதை சொல்லும் விதம் வித்தியாசமானது என்பதால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் இவர் வில்லனாக நடித்தார். இவர் மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் ஒரு நடிகை. பாயல் கோஷ் என்ற அந்த நடிகை அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அதில் இந்த கிரியேட்டிவி நபர் மிக மோசமானவர் கெட்ட எண்ணம் கொண்டவர் என்பதை நாடு தெரிந்து கொள்ளட்டும் இதை பிரதமர் நரேந்திர மோடி ஜி அறிந்து கொள்ளட்டும் என பிரதமரையும் டுவிட்டரில் டேக் செய்துள்ளார்.
இதை மறுத்த அனுராக், என் மனைவி, காதலிகள், என்னுடன் பணிபுரிந்த நடிகைகள் நான் பழகிய பெண்கள், யாரும் இது போல என்னிடம் நடந்து கொண்டதில்லை எது உண்மை பொய் என உங்கள் வீடியோவை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என கூறியுள்ளார்.