cinema news
பாலியல் வழக்கில் அனுராக் காஷ்யப்புக்கு போலீஸ் சம்மன்
பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப். ரத்தமும் சதையுமாக இவர் ஹிந்தியில் இயக்கிய பல படங்கள் அதிரி புதிரி ஹிட் ஆகின. இவருக்கு ஹிந்தியில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெறித்தன ரசிகர்கள் உண்டு சிறந்த பிலிம் மேக்கர் இவர்.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்திலும் இவர் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப்புக்கு சமீபத்தில் பாயல் கோஷ் என்ற பெண்ணால் பிரச்சினை வெடித்துள்ளது.
பாயல் கோஷ் ஹிந்தி நடிகை, அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். சில வருடங்கள் முன் சான்ஸ் கேட்டு வந்த போது மதுபோதையில் தன்னிடம் அனுராக் தவறாக நடக்க முயன்றார் என கூறியுள்ளார்.
இதை முற்றிலும் அனுராக் மறுத்துள்ள நிலையில் அனுராக் காஷ்யப் நாளை காலை 11 மணிக்கு மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.