cinema news
அனுராக் காஷ்யப் மீது போலிசில் புகாரளித்த நடிகை பாயல் கோஷ்
திரைத்துறையில் பாலியல் ரீதியான பிரச்சினைகள் கடந்த வருடம் மீ டூ பிரச்சினைக்கு பின் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இப்போது பாயல் கோஷ் என்ற நடிகை இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகாரளித்துள்ளார்.
முதலில் சமூக வலைதளங்களில்தான் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார். முதன் முதலில் வாய்ப்பு கேட்க அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் அறிமுகம் என்றும் ஒருமுறை தவறாக நடக்க முயற்சித்தார் அப்போது மது போதையில் அவர் இருந்தார் என அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் கூறியுள்ளார்.
முதன் முதலில் இந்த புகாரை பிரதமரை டேக் செய்து சொல்லி இருந்தார். அனுராக் காஷ்யப் பாஜகவை விமர்சனம் செய்ததால் அவதூறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படுவதாக அவரின் ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்போதும் ஒரு தரப்பினர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இந்த நிலையில்
அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாயல் கோஷின் வழக்கறிஞர் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இன்று இரவு 8 மணிக்கு பாயல் வீட்டுக்கு நான் செல்லவுள்ளேன். அங்கிருந்து 9 மணியளவில் நாங்கள் ஓஷிவாரா காவல்நிலையம் அனுராக் மீது புகாரளிக்கவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.