Entertainment
கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூரி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியே சூரியை புகழ்பெற செய்தது என சொல்லலாம்.
அதற்கு அடுத்தாற்போல் அதிகமான பட வாய்ப்புகள் சூரி வீட்டு கதவை தட்டியது. ஓவர் நைட்டில் முன்னணி பாப்புலர் காமெடி நடிகர் ஆனார் சூரி. சினிமாவோடு நின்று விடாமல் தனக்கு பிடித்த உணவு தொழிலையும் மதுரையில் செய்து வருகிறார்.
அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் சைவம், அசைவம் ஹோட்டல்களை மதுரையில் சூரி நடத்தி வருகிறார். இப்படி உழைப்பால் உயர்ந்த சூரியை பல கல்லூரிகள் மாணவர்களிடையே தன்னம்பிக்கை உரை நிகழ்த்த அழைக்கிறது.
சமீபத்தில் திருச்சி மாவட்டம் முசிறியில் ஒரு கல்லூரியில் பேச சென்ற சூரி அது தொடர்பான காட்சிகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
