cinema news
அந்நியன் பட ரீமேக் விவகாரம்- ஷங்கரின் பதில்
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2005ல் வெளிவந்த திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், சதா மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். ஹிந்து தர்மத்தின் நூலான கருட புராணத்தில் வரும் தண்டனைகளை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது.படமும் வெற்றி பெற்றது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படத்தை இயக்குனர் ஷங்கர் ஹிந்தியில் ரீமேக்குகிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் அனுமதி பெறாமல் எப்படி ஷங்கர் படத்தை ஹிந்தியில் ரீமேக்குவார் என அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடுத்தார்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர் படத்தின் கதை திரைக்கதை என்னுடையது யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என் உரிமையில் யாரும் குறுக்கிட முடியாது என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.