அண்ணாத்தேயில் எதுவும் மாற்றமில்லை

49

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் அண்ணாத்த இந்த படத்தில் ரஜினிகாந்த் நயன் தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சிறுத்தை சிவா என்றாலே அதிரடிக்கும் மாஸ் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது இந்த நிலையில் ரஜினிகாந்த் வேறு நடிக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.

ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ரஜினிகாந்த் தான் சம்பந்தமான பெரும்பாலான காட்சிகளை நடித்து கொடுத்து விட்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த நிலையில் படத்தை தயாரிக்கும்  சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்தே படம் வரும் தீபாவளியை முன்னிட்டு 4.11.2021ல் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்ததில் மாற்றமில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

பாருங்க:  அம்மா உணவகத்தில் உணவுக்குக் கட்டணம்! இன்றுமுதல் அமல்!
Previous articleபப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்
Next articleதேன் நடிகருக்கு சிறந்த நடிகருக்கான விருது