அண்ணாத்த தீபாவளிக்கு உறுதி- சன் பிக்சர்ஸ்

33

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. நயன் தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ரஜினிகாந்த் படத்துக்கு முதன்முறையாக டி இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தனது செட்யூல்கள் பெரும்பாலானவற்றை ஹைதராபாத்தில் முடித்து கொடுத்துவிட்ட கையோடு ரஜினிகாந்த் அமெரிக்கா பயணமாகிவிட்டார். இந்நிலையில் கொரோனா காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் எது எப்படி இருந்தாலும் வரும் தீபாவளிக்கு படம் உறுதி என இறுதியான உறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாருங்க:  கமலின் அவ்வை சண்முகி சில்வர் ஜூப்ளி ஆண்டை நோக்கி -24வது ஆண்டு கொண்டாட்டம்
Previous articleவாத்தியார் கால்பந்தாட்ட குழு டீசர்
Next articleஅர்ஜூனின் ஆஞ்சநேயர் கோவில்