Connect with us

அண்ணாத்த படத்தின் 50வது நாள் வெற்றி விழா

Entertainment

அண்ணாத்த படத்தின் 50வது நாள் வெற்றி விழா

அண்ணாத்த படம் கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியானது. இன்றோடு 50வது நாளை எட்டியுள்ளது இந்த படத்தின் 50வது நாள் வெற்றி விழாவையொட்டி படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவையொட்டி தொழில்நுட்பக் கலைஞர்களை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு நேற்று அழைத்திருந்தார் ரஜினி. இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, இசையமைப்பாளர் டி.இமான், படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் மிலன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினிகாந்த், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி, ஒவ்வொருவருக்கும் தங்கச் செயின் வழங்கி பாராட்டி யுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரஜினி அவர்களிடம் பேசும்போது, ‘‘அண்ணாத்த படம் ‘நெட்ஃபிளிக்ஸ்’-ல் வெளியான பிறகும் கூடதமிழகத்தில் பல தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்களும் என்னை போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாகக் கூறி சந்தோஷப்பட்டார்கள்.

‘நெட்ஃபிளிக்ஸ்’-ல் வெளியான எல்லா மொழிகளிலும் குறிப்பாக இந்தியில் மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ளது. உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

 

பாருங்க:  பழனிக்கு பால் காவடி எடுத்த காயத்ரி ரகுராம்- வீடியோ உள்ளே

More in Entertainment

To Top