Latest News
அண்ணாத்தேவுக்கு ஒரு சட்டம் மாநாடுக்கு ஒரு சட்டமா- முதல்வரிடம் கேள்வி கேட்கும் சிம்பு ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே திரைப்படம் வெளியானபோது அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. 100 சதவீதம் அனைவரும் படம் பார்க்கலாம் என்று இருந்தது. இருப்பினும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் எல்லா சலுகையும் கொடுப்பதாகவும் அரசு பற்றி புகார் எழுந்தது.
இதே போல் ஆன்மிக விழாக்களான கந்த சஷ்டி உள்ளிட்ட விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அண்ணாத்தேவுக்கு மட்டும் அனுமதி கந்த சஷ்டி அனுமதி இல்லையா என மக்கள் தரப்பில் கேட்கப்பட்டது.
தற்போது மற்றுமொரு புதிய விசயமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்தான் தியேட்டர் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு மற்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து சில சிம்பு ரசிகர்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால் அண்ணாத்த-வுக்கு ஒரு சட்டம், மாநாடு-க்கு ஒரு சட்டம். தன் நல்லப் பெயரை கெடுத்துக் கொள்கிறாரா முதல்வர் என கேட்டுள்ளார்.
