cinema news
அண்ணாத்த திரைப்பட புதிய அப்டேட்
ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் கொரோனா பிரச்சினைகளால் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து தடைபட்ட நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் மே 10-ம் தேதிக்குள் முடிக்கவுள்ளதாகவும் அதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரிரு நாட்களில் படமாக்கப்பட்டுவிடும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் இந்த வார இறுதியில் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அண்ணாத்த படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.