cinema news
அண்ணாத்த ஓடிடி தளங்களில் வெளியீடு
தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்தே. இந்த படத்தில் ரஜினிகாந்த், கீர்த்திசுரேஷ்,மீனா,குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 4ம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆன நிலையில் இன்று இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தனது சொந்த ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட் தளத்திலும் மாற்று தளமான நெட் ப்ளிக்ஸிலும் இந்த படத்தை இன்றுமுதல் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.
சன் நெக்ஸ்ட், நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் இன்று முதல் இப்படத்தை பார்க்கலாம்.