கடந்த அதிமுக ஆட்சியில் கூட்றவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜூ. மதுரையை சேர்ந்த இவர் தெர்மாக்கோலை தண்ணீரில் விட்டு பெரிய சர்ச்சையானதால் தமிழக இளைஞர்கள் இவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்காத நாள் என்பது குறைவு.
செல்லூர் ராஜூ நேற்று கொடுத்த பேட்டியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை தேவையில்லாமல் அதிமுகவை விமர்சிக்கிறார். இது போல அவர்களின் மற்றொரு தலைவர் நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் விமர்சித்தார் பிறகு எங்களிடம் பதிலடி வாங்கினார்.
திராவிட இயக்கங்கள்தான் தமிழ்நாட்டில் எல்லாம் செய்துள்ளன. இது பெரியார் , அண்ணா வளர்த்த இயக்கங்கள் என கூறியுள்ளார்.