தமிழக பாரதிய ஜனதா தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளார். எதிரணியினர் கேள்வி கேட்பவர்கள் முன்னாள் இவர் அளிக்கும் பதிலாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இருக்கும்.
மனதில் தோன்றியவற்றை துணிவுடன் தைரியமாக சொல்லும் அண்ணாமலை நியூஸ் 7 கேட்டிருந்த ஒரு கருத்துக்கணிப்புக்கு செமயாக நக்கல் செய்து டுவிட் இட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் ஊடகங்களால் மிகைப்படுத்தப்படுகிறது என அண்ணாமலை கூறுவது என கேள்வி கேட்டு நாலு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள் அதில் எதிர்கட்சி அரசியல், உண்மைக்கு புறம்பானது, ஊடகங்களுக்கு நெருக்கடி தர, சிறப்பாக செயல்படுவதால் என நாலு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளனர்.
நாலு ஆப்ஷன்களுமே அவர்களுக்கு சாதகமாக கொடுத்துள்ளதால் இதை பார்த்த அண்ணாமலை, என்ன இது அண்ணா கொஞ்சம் கருணை காட்டுங்க என கூறியுள்ளார்.
Anna @news7tamil. என்ன இது? 😁
Question is ok but why all options are one sided?
கொஞ்சம் கருணை காட்டுங்க ☺️! pic.twitter.com/ivEJX0mrot
— K.Annamalai (@annamalai_k) October 3, 2021