Latest News
தலைவர் ஆன உடனே அதிரடியை ஆரம்பித்த அண்ணாமலை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மித்ரா என்ற சிறுமிக்கு வயது 2 இவர் ஸ்பைனல் மஸ்குலர் டிஸ் ஆர்டர் என்ற நோயால் அவதிப்படுகிறார். இக்குழந்தையின் உயிரை காப்பாற்ற 22 கோடி ரூபாய் தேவை என்ற நிலை உள்ளது.
தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் இந்த நோயால் குழந்தையின் முதுகெலும்பில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு முதுகெலும்பு நரம்புகள் சிதைவடைகின்றன.
இந்த நோய்க்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாயாகவும், அதனை இறக்குமதி செய்ய இதர செலவுகள் 22 கோடி ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில் ,மித்ராவின் அப்பாவான கூலிதொழிலாளியால் அவ்வளவு பெரிய தொகைக்கு வழி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைவராக புதிதாக பொறுப்பேற்ற அண்ணாமலையிடம் இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் இதை உடனடியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனுவாக அனுப்பி வைத்துள்ளார்.
.@nsitharaman @Murugan_MoS @VanathiBJP @FinMinIndia @BJP4TamilNadu pic.twitter.com/cGJFxQsPWX
— K.Annamalai (@annamalai_k) July 13, 2021