கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு அந்த வேலை வேண்டாம் என ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருப்பதுதான் எனக்கு பிடிக்கிறது என பாஜகவில் சில காலத்துக்கு முன் இணைந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.
இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கட்சியில் இணைந்த உடனே மிக வேகமாக சுறுசுறுப்பாக இவர் பணியாற்றி வருகிறார். கட்சியில் முன்னணியில் உள்ளார் இவர். இவர் பேச்சுக்கு என கட்சியிலும் வெளியிலும் அதிக மக்கள் திரள்கின்றனர்.
இவரின் செல்வாக்கை பயன்படுத்தி இவருக்கு ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவர் கிணத்துக்கடவு தொகுதியை கேட்டுள்ளார். ஆனால் பாஜக சார்பில் சென்னையில்தான் இவருக்கு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாம்.
இது எல்லாம் வெளியில் உலவும் தகவல்கள் தானே தவிர அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.