தமிழக பிஜேபி யங் லீடர் அண்ணாமலை- பாஜகவினர் வரவேற்பு

20

தமிழக பாரதிய ஜனதாவில் அக்காலத்தில் இருந்து வரும் தலைவர்கள் அனைவருமே மென்மையான போக்கை கடைபிடிப்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல வருடமாக பாஜக பெரிய வெற்றிகளை தேர்தல்களில் பெறாத நிலையில் தமிழக பாஜகவுக்கு அதிரடியான நபர் தேவை என்றே கட்சியினரால் சொல்லப்பட்டு வந்தது.

கடந்த வருடம் கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பாஜகவில் துணைத்தலைவராக இருந்து வந்தார். இவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோதும் தோல்வியடைந்தார்.

அண்ணாமலை அதிரடிக்கு பெயர் போனவர். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது அண்ணாமலை செய்த அதிரடிகள் ஏராளம்.

இதனால் தமிழக பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் நோக்கில் பாஜக தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி விட்டு அண்ணாமலை ஐபிஎஸ்க்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  ஸ்டாலின் செய்தது நீதிமன்ற அவமதிப்பு- முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை
Previous articleபன்னீர் புஷ்பங்கள் படம் வந்து 40 ஆண்டுகள்- இயக்குனர்கள் நெகிழ்ச்சி
Next articleஇம்சை அரசன் வந்து 15 வருசம் ஆச்சாம்- இயக்குனர் நெகிழ்ச்சி