Latest News
அண்ணாமலை மீது நஷ்ட ஈடு கேட்டு திமுக வழக்கு- அண்ணாமலை விளக்கம்
பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை மீது 15 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருப்பதாக வந்த தகவலையடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்
100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.
நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்…
என அண்ணாமலை கூறியுள்ளார்.