தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் எனும் ஆதினம் பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெறும்.
இந்த வருடம் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இது போல விசயங்கள் அவசியமற்றது என்ற அடிப்படையிலும் மனிதனை மனிதனே சுமப்பது தவறு என்ற அடிப்படையிலும் தடை விதித்ததாக தெரிந்தது.
இருப்பினும் இது எங்கள் பாரம்பரிய உரிமை என மக்கள் போர்க்கொடி தூக்கினர். பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையும் நானே 21ம் தேதி போய் ஆதினத்தின் பல்லக்கை தூக்குவேன் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் பட்டினப்பிரவேசத்துக்கான தடை நீக்கப்பட்டது .நேற்று முன் தினம் 21ம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அவர் கூறியிருப்பதாவது.
22ஆம் தேதி தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் நாம் பங்கேற்போம் என்றிருந்தோம். அதே போல் இன்று இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு சிஷ்யனாகப் பங்கேற்றதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி! என கூறியிருக்கிறார்.