சூர்யாவுக்கு அண்ணாமலை ஐபிஎஸ் அட்வைஸ்

32

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா கடுமையான ஆட்சேபம் தெரிவித்து இருந்தார். இதற்கு வழக்கம்போல சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்து வருகிறது.

 

 

சூர்யாவின் பேச்சை பலரும் விமர்சித்தும் ஆதரித்தும் வருகின்றனர். நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாரதிய ஜனதா துணைத்தலைவருமான அண்ணாமலை பதிலுரை வழங்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, வருடா வருடம் 12ம் வகுப்பில் சில மாணவர்கள் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனால் 12ம் வகுப்பு தேர்வை தடை செய்ய முடியுமா அது போலத்தான் நீட் தேர்வும் என கூறியுள்ளார் அண்ணாமலை

பாருங்க:  சிறப்பு…! சூர்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய முன்னணி நடிகர்!