அஞ்சலி திருமணத்துக்கு தயாராகிறாரா

29

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் அஞ்சலி. ஆரம்ப காலத்தில் கற்றது தமிழ் படத்தில் நடித்தபோதெல்லாம் அஞ்சலி பற்றி பலருக்கு தெரியாது அப்போது இவர் முன்னணி கதாநாயகியும் இல்லை. பின்பு வந்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு, அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் இவரது க்யூட்டான நடிப்பு பலருக்கு பிடித்தது.

இந்நிலையில்

இவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. இவர் தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் உள்ளன.
ஏற்கனவே நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக பேசினர்.
இந்நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது.
மேலும், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஞ்சலி தரப்பில் இதனை இன்னும் உறுதிசெய்யவில்லை.
பாருங்க:  வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து – கமலின் விசாரணைக்கு எதிராக சர்ச்சை போஸ்டர் !
Previous articleஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்