cinema news
அனிருத் தான் தமிழ் சினிமாக்களை காப்பாற்றி வருகிறாரா? ப்ளூ சட்டை மாறன் அதிரடி
நேற்று வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். பரவலான விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளது என்னவென்று பார்ப்போம்.
படத்தை வழக்கம்போல் மொக்கை டைப் படம் என விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன் அனிருத் தான் எல்லா படத்தையும் தாங்கி நிறுத்துகிறார். போற போக்க பார்த்தா அனிருத் தான் எல்லா படங்களையும் காக்க வந்தவர்னு சொல்ல போறாங்க என்று விமர்சனம் செய்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் சொல்றபடி பார்த்தால் அது ஒரு வகையில் உண்மைதான். பீஸ்ட் படத்தையும் நல்லா இல்லேன்னு சொல்லிட்டு அனிருத் பிஜிஎம் தான் வலிமை சேர்க்கிறது என்று பலரும் கூறி இருந்தனர்.
பல இயக்குனர்களின் கதை இல்லா படங்களுக்கு இது போல மியூசிக் மட்டும்தான் வலிமை சேர்க்கிறது.