cinema news
யுடியூபில் லைவ் கான்சர்ட்! கொரோனாவுக்காக அனிருத் எடுத்த முடிவு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனிருத் நிதி திரட்ட உள்ளார்.
கொரொனாவால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் மே 3ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழில்நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவி வருகின்றனர்.
அதன்படி, இசையமைப்பாளர் அனிருத், யுடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும்,இன்றுஇரவு 8.52 ரசிகர்கள் தங்களுக்கு விரும்பமான பாடல்களைக் கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.