Latest News
மதுரையின் புகழ்பெற்ற ஆண்ட்ரூஸ் சித்தர் காலமானார்
இப்பூமி சித்தர்கள் அவதரித்த பூமி. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் அவதரித்தாலும் தற்போதைய காலத்தில் வாழும் சித்தர்கள் என சிலருண்டு.
திருவண்ணாமலையில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை போலவே தமிழ்நாடு முழுவதும் வாழும் சித்தர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர்தான் ஆண்ட்ரூஸ் சித்தர்.
பிறப்பால் கிறித்தவராக இருந்தாலும் கடந்த 35 ஆண்டிற்கும் மேலாக மதுரையில் உள்ள மாப்பாளையம் பகுதியில் ஒரு குடிசையில் தங்கி இருந்து அருளாசி வழங்கினார். இவரை வணங்குபவர்களை விபூதி பூசி ஆசிர்வாதம் செய்வார்.
இவரை சாக்கடை சித்தர் எனவும் மக்கள் இவரை அழைத்து வந்தனர். இந்த நிலையில் 90வயதில் நேற்று காலமானார். இப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அருகில் 7லட்சம் செலவில் ஒரு சிறிய இடத்தை வாங்கி அங்கேயே அவரை அடக்கம் செய்துள்ளனர்.