ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன். கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியான இப்படம் சக்கை போடு போட்டது.
இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரசாந்த் நடிக்க இயக்குனர் மோகன்ராஜா இப்படத்தை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் தெலுங்கிலும் இயக்கப்படுகிறது. தெலுங்கு திரைப்படத்திற்கான கலைஞர்கள் முழுவதும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் விவரம் இதோ.
தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மெர்லபாகா காந்தி இயக்குகிறார்
தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘அந்தாதூன்’ படத்தில் வில்லத்தனம் மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தபு. அதில் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் .

