cinema news
அந்தகனில் ஊர்வசி டப்பிங்
ஹிந்தியில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் வருகிறது. இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்க பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்திக் சிம்ரன் மற்றும் பலருடன் ஊர்வசியும் நடிக்கிறார்.
ஊர்வசி இதற்கு முன் பிரசாந்த் நடித்த மன்னவா, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் பிரசாந்த் நடிக்கும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தினமும் ஒருவரின் டப்பிங் செஸன் புகைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஊர்வசியின் டப்பிங் பணிகள் புகைப்படத்தை நடிகர் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.